Archive for October, 2008

அறிஞர் அண்ணா நுற்றாண்டு விழா

அறிஞர் அண்ணா அவர்களின் படைப்புகளை ஒலி வடிவில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தமிழகம் முழுவதும் பேரறிஞர் அண்ணா நுற்றாண்டு விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் எங்களுடைய இந்த முயற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

Comments

சொல்லாதது :: ஒலி வடிவில்

Arignar Annaஅவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு…..

 
icon for podpress  Sollathathu [29:23m]: Play Now | Play in Popup

Comments (1)

ரங்கோன் ராதா :: ஒலி வடிவில் :: பகுதி 1

Arignar Anna

…… “அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்” என்று நான் கேட்டேன். “கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி” என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். “போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்” என்று நான் வாக்களித்தேன்……

வெளியான ஆண்டு - 1943

 
icon for podpress  Rangoon Radha [12:15m]: Play Now | Play in Popup

Comments (1)